சிலாங்கூர் அரசு அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி முன்னாள் அமைச்சர் ஸைட் இப்ராகிம்மையும் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிரையும் சிலாங்கூரில் பேசுவதற்கு தடை விதிக்கக் கோரி சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலிக்கு அம்னோ-பின் சிலாங்கூர் தலைவர் நோ ஒமார் சவால் விட்டுள்ளார்.
இன்று காலையில் ஷா அலாம் பேரணியில் பேசிய நோ, சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி இந்த விவகாரத்தில் மௌனமாக இருக்கிறார். உண்மையில், இந்தப் பேரணியை அவர் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். நாங்கள் (பிஎன்) இதைச் செய்திருக்க வேண்டியதில்லை என்றாரவர்.
மகாதிர் பூகிஸை அவமதித்துள்ளார். சுல்தான் சினமடைந்துள்ளார். மந்திரி புசார் என்ற முறையில் அஸ்மின் சிலாங்கூர் சுல்தானின் உணர்ச்சிகளை உணர்ந்திருக்க வேண்டும் என்று நோ அந்தப் பேரணியில் கூறினார்.
மகாதிர் அவரின் கோபத்தால் நாட்டையே எரித்து விடுவார் என்று சிலாங்கூர் சுல்தான் கூறியிருந்த கருத்தை மறுத்து டிவிட் செய்திருந்த ஸைட் இப்கிராம் இப்போது குறைகூறலுக்கு ஆளாகியுள்ளார்.
காற்றடிக்கும் பக்கம் சாயும் நாணற்புல்!
kayu punya orang tidak ada akal
இந்த நாதாரி எந்த நூற்றாண்டில் வாழ்கிறான்? எதற்கு எடுத்தாலும் இவனை தடை செய் அவனை தடை செய் -இவனை வெட்டு – மற்றவர்களை எப்படியாவது தீர்த்து கட்டவேண்டும்– அறிவிலி.