படகு வழியாக ஆஸ்திரேலியா சென்ற 29 இலங்கையர்கள் நாடுகடத்தல்

படகு வழியாக ஆஸ்திரேலியா சென்ற 29 இலங்கையர்கள் நாடுகடத்தல்

படகு வழியாக ஆஸ்திரேலியா சென்ற 29 இலங்கையர்கள் அந்நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று காலை தனி விமானம் மூலம் ஆஸ்திரேலியாவிலிருந்து  பண்டாரநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்துள்ள நிலையில், விசாரணைக்காக குடிவரவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

2013 ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை கையாண்டு வரும் ஆஸ்திரேலிய அரசு படகு வழியே வருபவர்களை திருப்பி அனுப்பி வருகின்றதுஅந்த வகையில்  அப்படி கடந்தாண்டு 12 அகதிகளோடு வந்த ஒருஇலங்கை படகு திருப்பி அனுப்பப்பட்டது. 2014ல் 153 தமிழ் அகதிகளோடு வந்த படகும் அப்போது திருப்பி அனுப்பப்பட்டதுஅத்துடன்  31 படகுகளில் வந்த 771 க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளின் தஞ்சக்கோரிக்கையாளர்களையும் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை திருப்பி அனுப்பியுள்ளது.

இப்போது நாடுகடத்தப்பட்டுள்ள 29 இலங்கையர்கள் எந்த காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியா வந்தடைந்தவர்கள் என்பதைப் பற்றி விரிவான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. 

கடந்த இருவாரங்களுக்கு முன்னர், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு படகு வழியாக செல்ல முயன்ற 30 த்திற்கும் மேற்பட்டோர் இலங்கை புத்தளம் கடற்கரைப் பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

-tamilcnn.lk

TAGS: