சிங்கள இராணுவத்தால், வாழ்வாதாரத்தை இழக்கும் தமிழ் மக்கள்

இராணுவத்தின் வர்த்தக நடவடிக்கையால், வாழ்வாதாரத்தை இழக்கும் தமிழ் வர்த்தகர்கள்.

மன்னார், மடுரோட் சந்தியில் இராணுவம் மக்கள் உணவகம் என்ற பேரில், ஒரு மாபெரும் உணவகத்தை பெரும் ஆட்பலத்துடன் ( இராணுவம்) வெற்றிகரமாக கடந்த 08 வருடங்களாக நடத்தி வருகின்றனர்..

இதே பகுதியில்தான் பொதுமக்களும் பலசரக்குக் கடைகளையும், உணவகங்களையும் நடத்தி பெரும் நஷ்டமடைந்து வருகின்றனர், இதன் விளைவாக இரண்டு கடைகள் மூடப்பட்டு விட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இராணுவம், உணவுகளை எங்களை விட குறைந்த விலையில் விற்பதாலேயே அங்கே தமிழ், சிங்கள மக்கள் கூடுகின்றனர் எனவும் அவர்கள் தங்களின் படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவத்தை வைத்து ஆட்பலத்துடன் பொழுது போக்கிற்காக நடத்தி வருவதால் குறைந்த விலையில் உணவுகளை விற்க முடிவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலை மாற வேண்டும் எனவும், இவர்களின் கடைகளை அகற்ற சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்து எமது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறான கடைகளை இராணுவம் வடக்கு மாகாணம் முழுவதும் திறந்து வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

-athirvu.com

TAGS: