அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கை தமிழர்! ஐ.நா கடும் கண்டனம்

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை தமிழர் ஒருவர் நாடுகடத்தப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய நாட்டில் முன்வைக்கப்பட்ட பாதுகாப்பிற்கான மனுவை மதிப்பீடு செய்யாது இலங்கை தமிழரான ராஜா என்ற இளைஞரை நாடு கடத்துவதற்கு அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த நபரை நாடு கடத்தும் போது அவரின் பாதுகாப்பு தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளதா என ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் கேள்வியெழுப்பியுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த இளைஞரை நாடு கடத்த கூடாது எனவும், அவருக்கு பாதுகாப்பு தொடர்பில் விண்ணப்பம் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் கோரியிருந்தது.

எனினும், இந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யாது குறித்த இளைஞரை அவுஸ்திரேலியா நாடு கடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் பாதுகாப்புக் கோரும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்த ஆண்டு ஒக்டோபர் 1ஆம் திகதி தங்களது விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இல்லையெனில் அவர்கள் ஒருபோதும் பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் எனவும், அவர்கள் அகதியா? இல்லையா? என்பதை தீர்மானிக்க விண்ணப்பத்தில் கோரப்படும் தகவல்களை வழங்க வேண்டும் எனவும், கடந்த மே மாதம் அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், 41 பக்கம் கொண்ட ஆங்கில விண்ணப்பத்தை நிரப்ப போராடிய ராஜா என்ற இலங்கை தமிழ் அகதி, காலக்கெடுவிற்குள் அவ்விண்ணப்பத்தை நிரப்பும் சட்ட உதவியினை பெறமுடியவில்லை.

இந்த நிலையிலேயே அவர்களின் விண்ணப்பம் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-tamilcnn.lk

TAGS: