திருகோணமலையில் பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5 மாணவர்களை இராணுவத்தின் சிறப்பு அதிரப்படை சுட்டுக்கொண்டு இன்றோடு 12 ஆண்டுகளாகின்றது.
2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி, ஐந்து மாணவர்களும் நிலாவெளிக் கடற்கரையில் நின்றிருந்த வேளையே, அங்கு வந்த இராணுவத்தின் சிறப்பு அதிரப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
குறித்த மாணவர்களின் படுகொலைக்கான நீதிக் கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட போதிலும், இன்னமும் நீதி கிடைக்கவில்லை. படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய யாரும் தண்டிக்கப்படவுமில்லை.
மாறாக, மாணவர்களின் பெற்றோருக்கு தொடர்ந்தும் பாதுகாப்புத் தரப்பினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
-4tamilmedia.com