பெல்டா நில விவகாரம்மீதான கணக்காய்வு 30 நாள்களுக்குள் முடிந்து விடலாம்

பெல்டாவுக்குச்   சொந்தமான   நிலத்தில்   மேம்படுத்தப்பட்டு   வரும்  கோலாலும்பூர்   வெர்டிகல்   சிட்டி(கேஎல்விசி)  திட்டம்மீதான   கணக்காய்வு   எதிர்பார்க்கப்பட்டதைவிட   முன்னதாக  முடிந்து   விடலாம்.

இதனை  பெல்டா  தலைவர்   ஷாரிர்   அப்துல்   சமட்   தெரிவித்தார். அது   தொடர்பான   ஆவணங்கள்   எல்லாம்  பிரதமர்  துறையால்   நியமிக்கப்பட்ட   கணக்காய்வு   நிறுவனத்திடம்  ஒப்படைக்கப்பட்டு    விட்டன.

“பிரதமர்   (நஜிப்  ரசாக்)  30-நாளுக்குள்  முடிக்கச்  சொல்லியிருந்தார்.  எல்லா  ஆவணங்களும்   கிடைத்து  விட்டதால்  முன்கூட்டியே  முடித்து   விடலாம்”,  என்றாரவர்.