பிரதமர் பதவி பற்றி பிஎன் மற்றும் ஹரப்பான் பிரதமர் வேட்பாளர்கள் மேடை விவாதம் நடத்த வேண்டும் என்று மலேசிய வழக்குரைஞர்கள் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா ஶ்ரீவாசன் முன்மொழிந்துள்ளார்.
அம்பிகாவின் கருத்துப்படி, இது முதிர்ச்சியடைந்த மக்களாட்சி நாடுகளில் நடக்கிறது. ஆகவே அவர்களில் எவரும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.
விவாதத்திற்கு இரு வேட்பாளர்களும் ஒப்புக்கொண்டல், அவர் அதற்கு ஏற்பாடு செய்வதற்கு தயார் என்று அம்பிகா மலேசியாகினியிடம் கூறினார்.
கடந்த காலத்தில் நஜிப் இது போன்ற அழைப்பை ஏற்றுக்கொண்டதில்லை என்று சுட்டிக் காட்டிய போது, எதற்கும் முதல்தடவை என்ற ஒன்று உண்டு அவர் பதில் அளித்தார்.
முன்பு அதற்கு நஜிப் தயாராக இல்லாமல் இருந்திருக்கலாம். ஒரு வேளை, இப்போது அவர் தயாராக இருக்கலாம் என்று அம்பிகா மேலும் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஹரப்பான் கூட்டணி 93 வயதான முன்னாள் பிரதமர் மகாதிரை எதிர்வரும் பொதுத் தேர்தலில் அதன் பிரதமர் வேட்பாளராக நியமித்தது.
முன்பு, நஜிப்புடன் விவாதம் நடத்த மகாதிர் இரு முறை முயற்சி செய்துள்ளார்.