சிறிலங்காவை சீனாவின் பக்கம் செல்ல அனுமதிக்கக் கூடாது – இந்திய இராணுவத் தளபதி

சிறிலங்கா போன்ற நாடுகள் சீனாவை நோக்கிச் செல்வதை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவ நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“சீனா வலிமையான நாடாக இருக்கலாம். ஆனால் இந்தியா பலவீனமான நாடு அல்ல.

பாகிஸ்தான் எல்லையின் மீதுள்ள கவனத்தை இந்தியா சீனாவின் பக்கமும் திருப்ப வேண்டிய தேவை உள்ளது.

எமது அயல்நாடுகள் சீனாவை நோக்கி நகர்வதை அனுமதிக்கக் கூடாது.  அயலவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் கொள்கையை  இந்திய அரசாங்கம் காத்திரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

சீனாவைக் கையாளுவதற்கான பரந்துபட்ட மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, நோபாளம், பூட்டான், மியான்மார், சிறிலங்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை, இந்தியா தன் பக்கம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கு இந்தியா முழுமையான முயற்சிகளை எடுக்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

-puthinappalakai.net

TAGS: