பினாங்குத் தீவு மாநகர் மன்ற(எம்பிபிபி)ச் செயலாளர் இயு துங் சியாங், ஜனவரி 20- இலிருந்து புதிய மேயராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மாநில ஆட்சிக்குழு அம்முடிவைச் செய்ததாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் செள கொன் இயோ தெரிவித்தார்.
செள மாநில ஊராட்சி, வெள்ளக் கட்டுப்பாடு, போக்குவரத்து நிர்வாகம் ஆகிய விவகாரங்களைக் கவனித்துக் கொள்கிறார்.
“இயு ஜனவரி 22-இல் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வார்”, என்றாரவர்.
இயு, கட்டிடக் கலை வல்லுனர், பத்தாண்டுகள் கட்டிட இயக்குனராக அவர் பணியாற்றினார். அதன் பின்னர் 2016-இல் மாநகர் மன்றச் செயலாளரானார்.