ஜொகூர் ஹராப்பான் நாற்காலி பகிர்வு, பெர்சத்து முன்னிலை

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, ஜொகூர் சட்டமன்ற நாற்காலிகளில், பெரிபூமி பெர்சத்து மலேசியா கட்சிக்கு 18 இடங்களை ஒதுக்கியுள்ளது.

கடந்த ஜனவரி 18-ல், சட்டமன்ற இருக்கைகள் பகிர்வு ஒரு முடிவுக்கு வந்ததாக ஹராப்பான் தரப்பு தெரிவித்தது. டிஏபி-க்கு 14 இடங்களும், பிகேஆர் மற்றும் அமானா இரண்டுக்கும் முறையே 12 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆக, ஜொகூரில் பெர்சத்து அதிக இடங்களில் போட்டியிடவுள்ளது.

பெர்சத்துவின் திட்டவரைவு மற்றும் கொள்கை பிரிவு தலைவர் டாக்டர் ராய்ஸ் ஹுசேன், “ஜொகூர் ஹராப்பான் மாநாட்டில் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்,” என்று தெரிவித்தார்.

ஹராப்பான் கூட்டணி கட்சிகளுக்கிடையே, சுமூகமான முறையில் பேச்சுவார்த்தைகள் நடந்ததாக ராய்ஸ் கூறினார்.

“இது ஹராப்பானுக்கு ஒரு நல்ல அறிகுறி, நாங்கள் ஜொகூரையும் மலேசியாவையும் மேம்படுத்த விரும்புகிறோம்,” என்றார் அவர்.