கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், தலைமைக் கணக்காய்வாளரின் 1எம்டிபிமீதான கணக்குத் தணிக்கை அறிக்கையை ஓர் இரகசிய அறிக்கை அல்ல என்று அறிவிக்க வேண்டும் எனக் கோரி சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலியும் முன்னாள் அம்னோ உறுப்பினர் ஜாஹிட் முகம்மட் அரிப்பும் செய்து கொண்ட விண்ணப்பத்தை நிராகரித்தது.
அஸ்மினுக்கும் ஜாஹிட்டுக்கும் அந்த அறிக்கையின் இரகசியத்தன்மையை அகற்றக் கோரும் சட்டப்படியான தகுதியுரிமை கிடையாது என நீதிபதி கமாலுடின் முகம்மட் சைட் தீர்ப்பளித்தார்.
1எம்டிபி பொதுக் கணக்குக்குழு(பிஏசி)வுக்காக தயாரிக்கப்பட்டது, பொதுமக்களின் பார்வைக்காக அல்ல என்றாரவர்.