புலம்பெயர் தமிழர்களை குரைக்கும் நாய்கள் என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்: அடுத்த கதிர்காமராக மாறியுள்ளார்…

எனது அரசியல் பாதையில் நான் செல்வேன்… விமர்சனம் வைத்தால் அதனை நான் ஏன் கண்டுகொள்ள வேண்டும் ? போகும் வழியில் நாய்கள் குரைக்கும். ஒவர் நாய்க்கும் கல் எறிந்துகொண்டு போக முடியாது. ஆதலால் குரைக்கும் நாய் குரைக்கட்டும் என்று கூறியுள்ளார் மாண்பு மிகு சுமந்திரன் அவர்கள்… அதாவது இவர் கூறுவது சிங்களவரை அல்ல… சாட்சாத் தமிழர்களை தான்… அதுவும் புலம்பெயர் தமிழர்களை தான்… விமர்சனம் ஒன்றை வைத்தால், அதனை சரியாக எதிர்கொள்ள துப்பில்லாத இந்த மனிதர். விமர்சனம் வைப்பவர்களை நாய் என்று கீழத்தரமான வார்த்தைகளால் பேசியமைக்கு, உடனடியாக மன்னிப்பு கோரவேண்டும்..

சிங்களத்திற்கு வக்காளத்து வாங்கும் சுமந்திரன், ஒரு கட்டத்தில் கூறுகிறார், இலங்கையில் உள்ள எந்த ஒரு தமிழனுக்கும் தனி நாடு கேட்க்கும் ஆசை இல்லை என்று. அதனால் தாமும் அதனை கோரவில்லையாம். ஆனால் அரசுடன் பேசி அந்த பேச்சுவார்த்தை குழம்பினால் , தான் உடனே தனி நாடு கேட்ப்பாராம். அபோழுது எங்கே போகும் இவர் கொள்கை. அதாவது சிங்களத்தை மிரட்ட மட்டுமே தனி நாடு கோருவோம் என்பது இவரது பதிலாக உள்ளது. ஆனால் சுமூகமாக பேசி அதிகாரத்தை பெற்றுவிடுவோம் என்கிறார் சுமந்திரன். சுமந்திரன் உயிரோடு இருக்கும் வரை, ஏன் இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் சரியான அதிகாரப் பகிர்வை , இலங்கை அரசு தமிழர்களுக்கு ஒரு போதும் கொடுக்கப்போவது இல்லை. இது சுமந்திரனுக்கும் நன்றாக தெரியும். ஆனால் ..
தான் இருக்கும் வரை அரசியல் செய்யலாம் என்றும் நினைத்து இவர் இவ்வாறு நடப்பது. ஒட்டுமொத்த தமிழர்களையும் ஏமாற்றும் வேலை. இவர் அடுத்த கதிர்காமராக மாறியுள்ளார் என்பதே உண்மை… லண்டன் வரமுடியாமல் தப்பியோடிய சுமந்திரன் கனடாவின் கொடுத்த பேட்டியின் ஒரு பகுதியை இங்கே இணைத்துள்ளோம்.

-athirvu.com

TAGS: