ஆயர் ஹீத்தாம் தொகுதி – டிஎபி, அமனா மீண்டும் பேச்சுவார்த்தை

ஜோகூர், ஆயர் ஹீத்தாம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடப் போவது டிஎபியா அல்லது அமனா என்பது பற்றிய வியூகத்தை வகுப்பதற்கு பக்கத்தான் ஹரப்பானின் பங்காளிக் கட்சிகளான அவ்விரண்டும் மீண்டும் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக, அத்தொகுதி அமனா வேட்பாளருக்கு கொடுக்கப்படும், ஆனால் அவர் டிஎபியின் சின்னத்தின் கீழ் போட்டியிருவார் என்று ஹரப்பான் தலைமைத்துவம் கூறியிருந்தது.

இப்போது, அது குறித்து மறுபேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதை டிஎபியின் அனைத்துலகப் பிரிவு செயலாளர் தியோ நீ சிங் மற்றும் அமனாவின் துணைத் தலவர் சலாஹுடின் அயூப் உறுதிப்படுத்தினர்.

இவ்விருவருக்கும் ஜோகூரி அரசியல் தளங்கள் இருக்கின்றன.