யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டை நகரில் பாழடைந்த வயல் கிணறொன்றில் இருந்து பெருமளவிலான ஆயுதங்கள் மீட்கப் பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை போலிசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப் பட்ட ஆயுதங்களில் ரி.56 வகை துப்பாக்கிகள் மற்றும் குண்டும், மோட்டார் குண்டுகளும் ஆர் பீ ஜி குண்டு ஒன்று மற்றும் ராக்கெட்டு லாஞ்சர் வகை சார்ந்த குண்டுகளும் அடங்குவதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.
இக்குண்டுகளை அவதானித்த ஒரு தனிப்பட்ட நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வட்டுக்கோட்டை போலிசாரும் அதிரடிப் படையினரும் இணைந்து இக்கிணற்றில் உள்ள ஆயுதங்களை மீட்டுள்ளனர். இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான அரசின் யுத்தம் 2009 இலேயே நிறைவு பெற்ற போதும் தொடர்ச்சியாக அவ்வப் போது இவ்வாறு இலங்கையில் வடக்குப் பகுதியில் ஆயுதங்கள் மீட்கப் பட்டு வருகின்றன.
கடந்த வருடம் கூட யாழின் நவந்துரை மற்றும் வட்டுக்கோட்டைப் பகுதிகளில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப் பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-4tamilmedia.com
ஆயுதங்கள் மீட்கப் பட்ட செய்திகளைத்தானேப் அடிக்கடிப் போடுகிண்றீர்கள்; மற்றப் படி அன்றுப் போர் நடந்த நேரத்தில் வெறித்தனமாகவும் கொடூராமாகவும் போரை நடத்தினீர்களே; அன்று இலங்கை ராணுவத்தால் கொன்றுக் குவித்த பல்லாயிரக்கணக்கான குற்ற மற்ற மக்களை யாவருக்கும் தெரியாத மறைக்கப் பட்ட இடங்களில் புதைத்தீர்களே. அதில் ஒன்றைக் கூட இதுநாள் வரை இலங்கை அரசு அடையாளம் காணவில்லையே, ஏன்? அதுயெல்லாம் மறைக்கப் பட்ட செய்திகளோ? இதற்க்கு இலங்கை அரசு உலகிற்குச் சொல்லப் போகும் செய்தி என்ன? ஆயுதங்கள் மீட்பு நடவடிக்கை மட்டும் செய்தியா? நீங்கள் செய்த போர்க் குற்றங்கள் செய்திகளில்லையா?