தமிழீழ உணர்வுடன் நேற்றைய தினம் பேர்லினில் விடுதலை மாலை 2018 நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
தமிழீழ ஆன்மாக்களை மனதில் நிறுத்தி தமிழீழ தேசத்துக்காக தமது உயிர்களை விதையாக்கிய அனைத்து உறவுகளின் நினைவாக பேர்லினில் நேற்று சனிக்கிழமை விடுதலை மாலை நிகழ்வு நடைபெற்றுள்ளது. பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில், அதனை தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியும் ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வில் தமிழீழ எழுச்சி உரை, சிறுவர்களின் நடன நிகழ்வு, சமகால அரசியல் மற்றும் எழுச்சி பாடல்கள் போன்றன இடம்பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தமிழீழ அழிப்பிற்கு பரிகார நீதியை நிலைநாட்டவும், தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்கவும், தாயகத்தில் இளையவர்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்ற முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும், பிறந்தாலும் தமது வேர்களின் தேடும் பயணத்தில் சிறுவர்களும் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-athirvu.com