அரசியல் தலையீடின்மையால் வடமாகாணசபை சாதிக்கின்றது!

வடமாகாணசபையில் காரியாலய நடவடிக்கைகளில் அரசியல் ரீதியான உள்ளீடுகள் குறைந்து காணப்பட்டதால்த்தான் கடந்த ஆண்டு ஏழு தங்கவிருதுகளைப் பெறமுடிந்தது என்று நம்புகின்றேன்.

அலுவலர்கள் தங்கள் கடமைகளைச் சட்டப்படி செய்ய வேண்டும். பக்கச்சார்பின்றிச் செய்ய வேண்டும். ஒழுங்காகவுந் திறமையுடனும் செய்ய வேண்டும். ஆனால் அவர்களை அரசியல் ரீதியாக நெருக்குவதானது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். இதை உணர்ந்தே வடமாகாணசபை சுதந்திரமாக இயங்க விடப்பட்டதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விட்டதால் நிர்வாகிகளான எமக்குக் கிடைத்த பரிசு. “அரசியல் முடிவுகளை செயற்படுத்த முடியாத கையால் ஆகாதவர்கள்” என்ற விமர்சனமும் தானென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையில் கடந்த ஆண்டு திறமையான நிர்வாகம் மற்றும் கணக்குகளை பேணிய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் ஜனாதிபதி மட்டத்தில் ஏழு தங்கவிருதுகளை பெற்றிருந்தன.

அதனை கௌரவிக்கும் வகையில் யாழ்.பொதுநூலகத்தில் இன்று நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எம்மை வினைத்திறன் அற்றவர்கள் என்று இது காறும் விமர்சித்தவர்கள் சென்ற கால நியதிகளை வைத்து விமர்சித்தவர்களே. அதாவது ஒரு அரசியல்வாதி என்றால் தனக்குத் தேவையானவற்றைத் தட்டிப்பறித்து அலுவலர்களைக் கொண்டு நடைமுறைப்படுத்துபவர் என்று அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அவ்வாறுசெய்யாதவன் வினைத்திறன் அற்றவன் எனப்பட்டது.

இதனால்த்தான் முன்னைய இராணுவ ஆளுநர் ஒரு இராணுவ ரீதியான நிர்வாகத்தை நடத்தி வந்தார். ஆனால் அவர்களின் முடிவுகளை அவர் பின் வந்த அரசாங்க பொதுச்சேவையில் இருந்து ஓய்வு பெற்ற சிரேஸ்ட அலுவலரான ஆளுநர் “பிழை” என்று அடையாளம் கண்டார். வெளிப்படைத் தன்மையும் ஊழலற்றதுமான ஒரு நிர்வாகம் நடைபெறுவதானால் இராணுவரீதியாக “செய் இல்லையேல் செல்” என்ற ரீதியில் நடைபெறமுடியாது. ஒரு விடயத்தைச் செய்ய சட்டம் இடம் கொடுக்கின்றதா என்பதைப் பாராது தான்தோன்றித்தனமாக நடவடிக்கை எடுக்க அந்த முறை வழிவகுத்தது. இதைத்தான் நல்லநிர்வாகம் என்றுஎம்முட் பலர் அடையாளங் கண்டுஅதனையே நாமும் பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்த்தனர்.

இந்த நடைமுறை பிழையென்று அரசியலுக்கும் நிர்வாகத்திற்கும் வந்தவுடனேயே நாங்கள் அடையாளங் காணநேரிட்டது. சிலவிடயங்களை நாம் அவதானித்தோம். அதாவது நிர்வாகசேவை என்று ஒரு சேவையை உருவாக்கி,அதற்கான பயிற்சி அளித்து, அவர்களுக்கான நடைமுறைகளைச் சட்டதிட்டங்களைவ குத்து,அலுவலர்கள் அவற்றில் இருந்து வழுவ நேரிட்டால் உத்தியோகபூர்வமாக மாற்று நடவடிக்கைகள் எவ்வாறு எடுப்பது என்பது போன்ற பல வரையறைகளை அரசாங்கம் வகுத்திருந்தது.

பக்கச் சார்பில்லாமல் தமது கடமைகளைச் சட்டப்படிசிரத்தையுடன் செய்வதையேநிர்வாகச் சட்டமும் கணக்கியல் சட்டமும் எம் அலுவலர்களிடம் எதிர்பார்த்தன. அதைச் செய்யவிடாது அரசியல்வாதிகள் தமக்குப் பக்கச்சார்பாக அலுவலர்கள் நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது பிழையென்றே எமக்குப்பட்டது. ஆகவே அலுவலர்கள் சட்டப்படி சிரத்தையுடன் பக்கச் சார்பின்றிக் கடமையாற்ற நாம் வழியமைத்துக் கொடுத்தோம். அண்மையில் மாற்றலாகிச் சென்றவவுனியாஅரசாங்கஅதிபர் புஷ்பகுமாரஅவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் அரசியல் ரீதியாகநாங்கள் அவர் நிர்வாகத்தில் எந்தவித உள்ளீடல்களிலும் இறங்காததைக் குறிப்பிட்டு தனது நன்றியைத் தெரிவித்தார். எமதுஅலுவலர்கள் எமதுஅரசியல் ரீதியானஉள்ளீடல்கள் இன்றி தமது கடமைகளைச் செய்தபடியால்த்தான் இந்தவிருதுகள் தரப்பட்டுள்ளன என்று நம்புகின்றேன்.

உங்களின்முன்மாதிரியில் இனிவரும் காலங்களிலும் இது போன்ற சிறந்த நிதி முகாமைத்துவத்தைப் பேணிமிகச்சிறந்தபெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் பொதுமக்களுக்குசிறப்பானசேவைகளைவழங்குவதற்கும் அனைத்துஅதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் கடுமையாகவும் நேர்மையாகவும் உழைக்கவேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.நாட்டின் சகல அமைச்சுக்கள் திணைக்களங்கள் போன்றவற்றினிடையே நீங்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளீர்கள். இவ்வாறான ஒரு உயர் மதிப்பைப் பெற அதியுயர் செயலாற்றுகையை வெளிப்படுத்திய எல்லா நிறுவனங்களுக்கும் அலுவலர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன்.

நாங்கள் விருது அளிக்கும் ஒருநிகழ்ச்சியில் ஒருவயோதிபர் கலந்துகொண்டார். விருதைநான் வழங்கியதும் அவர் தேம்பித் தேம்பி அழுதார். பின்னர் அவரிடம் ஏன் என்று கேட்டதும் “என்னையும் மதித்துஅழைத்துவந்துவிருதுவழங்கிவிட்டீர்களே. என் வாழ்நாளில் இது மறக்கமுடியாதநாள்” என்றார். நாம் செய்யும் பணிக்குமதிப்புகிடைக்கும் போதுஏற்படும் மகிழ்ச்சிக்குஎல்லையில்லை. எனவேஉங்கள் ஒவ்வொருவரையும் உங்கள் கடமைகளை முறையாகப் பாரபட்சமின்றிவினைத்திறனுடன் தொடர்ந்து செய்யுங்கள் என அழைப்புவிடுத்துள்ளார்.

-puthinamnews.com

TAGS: