அன்வார் இப்ராஹிம் துன் டாக்டர் மகாதிருக்கு மீண்டும் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, அவருடைய முன்னாள் தலைவர் தற்போதைய அரசாங்கத்தால் துன்புறுத்தப்படுவதாகவும் அன்வார் கூறினார்.
“அவர் மாறிவிட்டார் மற்றும் சீர்திருத்த திட்டத்தில் உறுதியாக இருக்கிறார்,” என்று அன்வார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியில் இணைந்ததிலிருந்து, மகாதீர் மாற்றங்களைச் செய்ய தயாராக இருக்கிறார் என்ற அவர், மகாதீரை சிம்பாவே தலைவர், ரோபட் முகாபேவுடன் ஒப்பிட்டு பேசுவது நியாயமல்ல என்றார்.
“அரசாங்கம் அதிகமான தீங்குகளைச் செய்துவிட்டது,” என்றார் அவர்.
கடந்த மாதம், ஹராப்பான் தலைவரான மகாதீரைப் பிரதமர் வேட்பாளராக பக்காத்தான் ஹராப்பான் அறிவித்தது. சீர்திருத்த திட்டங்களைத் தியாகம் செய்யவேண்டி வரும் என்ற அச்சத்தில், இதனை சில பிகேஆர் தலைவர்கள் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதான் அரசியல் என்பது எவ்வளவு உண்மை பார்த்திர்களா. இவன் எவ்வளவு அடித்தாலும் தங்குவான் என்று ஒரு சினிமா காமெடி நடிகர் வடிவேலு ஒரு படத்தில் சொல்லுவர். இன்று பல சோதனைகள் பல வேதனைகள் எல்லாம் மறந்து வேதனையில் கைதியாக இருக்கும் இவர் அவரை (மகாதீர்) பார்த்து ரொம்ப நல்லவர் என்று சொல்கிறார். “அவர் மாறிவிட்டார் மற்றும் சீர்திருத்த திட்டத்தில் உறுதியாக இருக்கிறார்,” என்றும் சொல்கிறார். அன்று இவரை வைத்து (அன்வார் இப்ராகிம்) வைத்து வேடிக்கை விளையாடு கண்பித்தது மானம் உள்ளவன்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட மாட்டார்கள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகள் முதல் பெரியோர் வரை தெரியாத ஒரு வார்த்தை ஒன்றை சொல்லி அருவருப்பான பழி சுமைகள் சுமத்த பட்டவர். அன்வார் இப்ராகிம் நல்ல பேச்சாளர், நல்ல மனிதர் என பெயர் எடுத்தவர் மலேசியா அரசியலில். ஒரு நேரத்தில் கோவிலில் மணி அடித்து பார் என சவால் விட்டவர். பிறகு நான் சொன்னது தவறு என உணர்ந்து மன்னிப்பும் கேட்டார். சிறந்த அரசியல் வாதி. ஆம் இன்று (“அரசாங்கம் அதிகமான தீங்குகளைச் செய்துவிட்டது,”) என்று சொல்கிறார். அன்று இவர் காலத்தில் எல்லாம் சரியாக செய்தாதார்கள. நிறையவே கேள்விகள் கேட்கலாம்…வேண்டாம் என விடுகிறேன். என்ன செய்வது… நமக்கு வைத்த தலைவன்கள் அப்படி. தலை சரியாக இருந்தால் வால் சரியாக இருக்கும் என்று சொல்வார்கள். இது பொதுவான கருத்துவாகினும் நம் தலைவர்கள் ஒரு சிலர் பெருச்சளிகள் போல் அன்றும் இன்றும் உள்ளதால் என்ன செய்வது. நம் கையே நமக்கு பலம் என்றாகிவிட்டது. மன்னிப்போம் மறப்போம். இன்று… நாளை விடியலை பார்போம் எல்லாம் நன்மைக்கே என்று…. நன்றி.