முதன் முறையாக லண்டனில் இணைந்துள்ள பல தமிழ அமைப்புகள்: சிங்களம் தற்போது கலக்கத்தில்

2009ம் ஆண்டுக்குப் பின்னர் லண்டனில் உள்ள தமிழ் அமைப்புகள் சில உடைந்தது. மேலும் சொல்லப்போனால் பல அமைப்புகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. இவை அனைத்துமே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி வேண்டு போராடி வந்தது. இருப்பினும் அவர்களுக்கிடையே ஒன்றுமை என்பது இன்றுவரை இருக்கவில்லை என்பது மிகவும் மனம் வருந்தும் ஒரு விடையமாக இருந்து வந்தது. லண்டன் தமிழ் மக்கள், இதனை பல தடவை சுட்டிக் காட்டி அனைத்து அமைப்புகளும் ஒன்றாக இயங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தார்கள். ஆனால் அத்தி பூத்தால் போல, தற்போது நடைபெற்ற நிகழ்வு ஒன்று பல தமிழ் அமைபுகளை ஒன்றாக்கியுள்ளது.

கடந்த 4ம் திகதி சிங்கள ராணுவ பிரிகேடியர் பிரியங்க தமிழர்களை பார்த்து கழுத்தை வெட்டுவேன் என்று காட்டிய பின்னர், நடைபெற்ற சம்பவங்களும். அதன் பின்னர் நேற்றைய தினம்(9) அன்று நடைபெற்ற மக்கள் எழுச்சி ஊர்வலமும் பல அமைப்புகள் இணைந்து ஒன்றாக நடத்தியுள்ளார்கள் என்று அறியப்படுகிறது. இதனை சிங்கள அரச சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க. இன் நிகழ்வு பிரித்தானிய தமிழர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அனைத்து தமிழ் அமைப்புகளும் இவ்வாறு ஒன்றாக திரண்டு , சிங்களத்திற்கு எதிராக நேற்றைய தினம் போராட்டம் நடத்தியது. தமிழர்கள் மீண்டும் ஒற்றுமையாகி ஒரு நேர் பாதையில் பயணிக்க தொடங்கி உள்ளார்கள் என்பதனை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

இந்த சிங்கள பிரிகேடியர் விடையத்தில் கீழ் காணும் அமைப்புகள் தற்போது ஒன்றாக இணைந்து செயலாற்றி வருகிறது என்பது பெருமைக்குரிய விடையமாக உள்ளது. இதனை சிங்கள அரசு சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த உந்து சக்த்தி நிச்சயம் எம்மை ஒரு நல்ல பாதையில் இட்டுச் செல்லும் … அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு தான் என்பார்கள். நாம் சக்தியில்லாதவர்களாக இருந்தால் கூட, 100 பேர் ஒன்றாக சேர்ந்தால் அதில் ஒரு சக்தி பிறக்கும்…

கீழ் காணும் அமைப்புகளே தற்போது போராட்டத்தில் ஒரு அணியாக உள்ளார்கள்..

Tamils for Labour

Transnational Government of Tamil Eelam (TGTE)

British Tamil Conservatives (BTC)

British Tamils Forum (BTF)

Global Tamil Forum (GTF)

International Centre for the Prevention and Prosecution of Genocide (ICPPG)

Tamils Coordinating Committee (TCC-UK)

Tamil Friends of the Liberal Democrats

Tamil Information Centre (TIC)

Tamil National Alliance – UK (TNA-UK)

Tamil Solidarity (TS)

Tamil Youth Organisation (TYO)

World Tamils Historical Society (WTHS)

-athirvu.com

TAGS: