கொழும்புக்கு திருப்பி அழைக்கப்பட்டார் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ

பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோ, கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்காவின் சுதந்திர நாளன்று, லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை நோக்கி பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோ கழுத்தை அறுத்து விடுவேன் என்பது போல சைகையில் எச்சரித்திருந்தார்.

இதையடுத்து, கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோவை பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து உடனடியாக இடைநிறுத்துவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்தது.

எனினும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உடனடியாக அவரது இடைநிறுத்தத்தை ரத்துச் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில், பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோ இன்று கொழும்புக்குத் திரும்புகிறார் என்று  ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் திருப்பி அழைக்கப்பட்டமைக்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை.

-puthinappalakai.net

TAGS: