மலேசியாவை வழிநடத்த, பாஸ் கட்சியின் மீது நம்பிக்கை வைக்குமாறு, சீன சமூகத்தைப் பாஸ் தலைவர் அப்துல் ஹடி ஆவாங் கேட்டுக்கொண்டார்.
கோலா திரெங்கானுவில், நேற்று, சீனப் புத்தாண்டு உபசரிப்பில் கலந்துகொண்ட அவர் ஜிஇ14-ல் வெற்றிபெற்று, நாட்டை வழிநடத்த பாஸ் முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
“ஜிஇ14-ல், பாஸ் 130 நாடாளுமன்றங்களில் போட்டியிட உள்ளது, நாட்டை வழிநடத்த நமக்கு (பாஸ்) 112 நாற்காலிகள் தேவை. 112 இடங்களை வென்றுவிட்டால், பாஸ் நாட்டை ஆட்சி செய்யலாம்.
“ஆக, பாஸ் மீது நம்பிக்கை வைக்குமாறு நாங்கள் சீன சமூகத்தைக் கேட்டுக்கொள்கிறோம், திரெங்கானுவில் மட்டுமல்ல, மலேசியா முழுக்க,” என்று அவர் சீனர்களை வலியுறுத்தியதாக ஹராக்கா டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.
“அரசியலில் நாம் வாதிடலாம், ஆனால் போராட முடியாது, சண்டையிட முடியாது. கருத்து மோதல்கள் இருக்கலாம், ஆனால் அது சண்டையாகக் கூடாது. ஆக, பாஸ் சண்டையை ஏற்படுத்தும் காரணங்களைத் தடுக்க முயலும்.
“உண்மையில் இஸ்லாம், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் மலாய் கம்பங்களில் எப்படி வாழ முடியும் என்பதை இஸ்லாமியர்களுக்குப் போதிக்கின்றது.
“1969-ல் நடந்த மே 13 சம்பவம், திரெங்கானு, கிளாந்தான், கெடாவில் நடக்கவில்லை. ஆனால், பினாங்கிலும் சிங்கப்பூரிலும் அந்த இனக்கலவரம் நடந்தது.
“இஸ்லாத்தை உண்மையில் பின்பற்றும் இடங்களில் எந்தவொரு குழப்பமும், கலவரமும் ஏற்படவில்லை,” என்றார் அவர்.
இ்ந்நாட்டை அழிக்க வல்ல நிலா கட்சிக்கு மறந்தும் ஓட்டு போட வேண்டாம்.
ஆடு மழையில் நனைகிறதென்று ஓநாய் அழுததாம்.சமயத்தை வைத்துக்கொண்டு சூதாடகலம் என்று சிலர் நம்புவது அறிவுடைமையாகாது.
நம்மவர்களுக்கு மறதி கொஞ்சம் அதிகம்.
enn evanai barisan serkavillai enna muthal yosingkal
இவர், பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹடி ஆவாங் கேட்டுக்கொண்டது தவறு இல்லை என்பது என் கருத்து. ஆளும்கட்சி இன்று 13 வருடம் ஆட்சியில் இருக்கின்றன. அதானால் மக்கள் சுபச்சமாக இருந்தும்கூட ஒரு சில தவறுகள் காரணமாக நாம் இன்று எதிர்கட்சியை தேடுகிறோம். பாஸ் கட்சி முன்னால் தலைவர் தோக் குறு நிக் அஜிஸ் அவர்கள் மிக சிறந்த தலைவர் மாமனிதர் ஆன்மிகவாதி. நேரில் சந்தித்தும் இருக்கிறேன் கடந்த 6 வருடம் கிளந்தான் மாநிலத்தில் வேலை நிமித்தமாக இருந்த பொழுது. அடுத்து. இன்று அவரின் வழியில் வந்தவர் தான் இந்த தலைவர் அப்துல் ஹடி ஆவாங். இன்று இவரின் கொள்கைகள் முன்னால் தலைவர் போல் இல்லாமல் மறைமுகமாக திசைமாறி இருப்பினும் அவர் அந்த முன்னால் தலைவர் வகுத்த பாதையில் கொஞ்சம் செல்கிறார் என அறிவோம். பாஸ் கட்சி அவற்றின்மீது பாசம் கொண்ட மக்கள் இன்றும்கூட இருகின்றனர். அந்த முன்னால் தலை தோக் குறு நிக் அஜிஸ் அவரின் காலத்தில் நமக்கு இந்தியர்களுக்கு ஒரு சில தொகுதிகள் பாஸ் கட்சியின் சார்பாக அதன் கீல் போட்டி இட வாய்ப்பும் கொடுத்தது நாம் மறந்து விட முடியாது. அது ஒரு இஸ்லாம் கட்சி இருந்தும், இன்றும்கூட நமது இந்தியர்களுக்கு அங்கு ஒரு இடம் உண்டு. அதையும் நாம் மறந்து விட முடியாது. நமது ஆளும்கட்சி எனும்போது போது UMNO முழுக்க இஸ்லாம் நண்பர்கள் இருக்கும் ஒரு கட்சி அதில் நமது இந்திய தமிழ் பேச கூடிய சகோதரர்களுக்கு ஏதும் வாய்ப்பு கொடுத்து உள்ளதா. அப்படியே கொடுத்து இருந்தாலும்கூட அந்த இந்திய தமிழ் தலைவர்கள் தமிழ் பேச தெரியாத தலைவர்கள். நம் தமிழ் முஸ்லிம் அறிஞர்கள், தமிழ், இலக்கியம், கவிதை என மிக சிறந்த கல்விமான்கள் நம்மிடம் இருப்பினும். அவர்களை அழைத்து ஒரு இடம் UMNO சார்பாக இதுவரையில் கொடுத்தது உண்டா. அப்படி ஒரு வாய்ப்பு ஒரு இந்திய முஸ்லிம் கட்சி வந்தது, இருந்தது அது இருக்க இல்லையா என்று தெரிய வில்லை. அதன் தலைவருக்கு ஒரு சென்ட்ரல் பதவி கொடுத்தார்கள். அது போதுமா. இப்போ இந்த பாஸ் தலைவர் அப்துல் ஹடி ஆவாங் பல காரணங்கள் முன் வைத்து கோரிக்கைகள் விடுக்கிறார். நாம் இப்போது ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். அடுத்து ஆட்சிக்கு வர வைப்பது ஆளும் கட்சியா அல்லது எதிர்கட்சியா என நம் கையில் தான் உள்ளது. இதில் பாஸ் கட்சி எதிர்கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட வேண்டும் என்பதே மக்களின் ஆவல். இது நடக்குமா. அடுத்து PSM என்ற பெயர் மக்களிடம் அதிகம் அறிமுகம் தெரியாத அந்த கட்சியாக இருப்பினும் ஒரு சில நேரம் கண்ணமூட்சி ஆட்டம் ஆடிவிட்டு அமைதியா இருக்கிறது. நாம் கேட்பது ஒன்று பட்டால் சிறந்தது இது ஏனோ தெரியவில்லை அதன் தலைவர்களுக்கு. விடிய விடிய தூங்கி எழுந்து வந்து வந்தவர்கள் போல் உள்ளது அவர்களின் வேடிக்கையான அறிக்கைகள். நன்றி…
ஐயா g mohan அவர்களே– கடந்த 60 ஆண்டுகள் ஆண்டு இந்த ஆட்சி நம்மவர்களுக்கும் நாட்டுக்கும் எந்த அளவில் நன்மை புரிந்து இருக்கிறது? இதில் முழு அளவில் பயனடைந்தது யார் என்று எல்லோருக்கும் தெரியுமே.
இதான்டா நாயே ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி மனுசன கடிக்கிறது. இப்போ நீ மே 13 கலவரத்தை பற்றி பேசற, அதை நேரில் பார்த்தவங்க இன்னும் உயிரத்தான் இருக்கோம். முழுக்க அரசியலுக்காக அம்னோ ஆரம்பித்த்து. அந்த கலவரத்தை வைச்சி அம்னோ அதன் ஆட்சியை சிலாங்கூரில் மேலும் 40 வருடங்கள் நீடிச்சிக்கிட்டது எங்களுக்கு தெரியாதா? பாரிசான் 13 இடத்தை மட்டும் வெற்றிப்பெற்று, கலவரத்துக்கு பின் ஒரே சுதந்திர வேட்பாளரை வாங்கி ஆட்சியை பிடித்த அலங்கோலம் எல்லாம் எங்களுக்கும் தெரியுமடா ! கூமுட்ட.