அம்னோ வேட்பாளர் பட்டியல் பிரதமரிடம் ஒப்படைப்பு

அம்னோ   14வது  பொதுத்  தேர்தலுக்கான  அதன்  வேட்பாளர்   பட்டியலைப்   பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்கிடம்   ஒப்படைத்துள்ளதாக    தலைமைச்    செயலாளர்   தெங்கு  அட்னான்  தெங்கு   மன்சூர்   கூறினார்.

இப்போது   வேட்பாளர்களை    இறுதிசெய்ய   நஜிப்பும்  கட்சித்  துணைத்    தலைவர்   பணிகளைக்  கவனித்து  வரும்   உதவித்   தலைவர்   அஹமட்  ஜாஹிட்   ஹமிடியும்   அம்னோ   தொகுதித்   தலைவர்களைச்   சந்தித்து  வருவதாகவும்    அவர்   சொன்னார்.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள    வேட்பாளர்கள்   மக்கள்  ஆதரவைப்  பெற்றவர்கள்தான்   என்பதை   உறுதிப்படுத்திக்கொள்ள   அவ்வாறு  செய்யப்படுவதாக   கூட்டரசுப்  பிரதேச   அமைச்சருமான    தெங்கு   அட்னான்   கூறினார்.

அது   புதுமுகங்களையும்   அனுபவம்  வாய்ந்தவர்களையும்     கொண்ட     ஒரு பட்டியல்    என்றாரவர்.