பக்கத்தான் ஹரப்பானுக்கு நகர்ப்புற மலாய்க்காரர் ஆதரவைப் பெறுவது “பெரும் சிரமமாக” இருக்கும் என்கிறார் பிரபல கல்விமான் வான் சைபுல் வான் ஜான்,
வான் சைபுல் பெர்சத்து கட்சியில் இணைந்து 14வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் என்று ஊகங்கள் தெரிவிக்கப்பட்டுவரும் வேளையில், சிங்கப்பூரின் நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸில் வெளிவந்த ஒரு கட்டுரையில் அவர், ஹரபான் வெற்றி மலாய்க்காரர்கள் அனுபவிக்கும் சலுகைகளுக்கு ஆபத்தாக முடியலாம் என்ற அச்சம் வாக்காளரிடையே நிலவுவதை கவனப்படுத்தியுள்ளார்.
“அவர்கள் டிஏபியை மலாய்க்காரர்கள் அனுபவிக்கும் சலுகைகளை அகற்றும் நோக்கம் கொண்ட சீனர்களின் கட்சியாகத்தான் பார்க்கிறார்கள். அக்குற்றச்சாட்டை டிஏபி தொடர்ந்து மறுத்து வந்துள்ள போதிலும் அதன்மீது நம்பிக்கையின்மை தொடர்கிறது.
“இன்று ஹரபானில் அதிகமான எம்பிகளைக் கொண்ட கட்சி டிஏபி என்பதால் இப்படிப்பட்ட ஒரு தோற்றப்பாடு நிலவுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது”, என்றாரவர்.
தாம் மேற்கொண்ட ஆய்வுகளில் நகர்ப்புற மலாய்க்காரர்களிடையே அடையாள அரசியலைப் பின்பற்றும் போக்குத்தான் இன்னமும் நிலவுகிறது என்றாரவர்.
பொருளாதாரம், நல்ல நிர்வாகம் போன்றவை பற்றிய கவலை இருந்தாலும் அடையாள அரசியலைவிட்டு விலக அவர்கள் தயாராக இல்லை.
ஜனநாயக, பொருளாதார விவகாரக் கழகம் (Ideas) என்னும் சிந்தனைக் குழுவின் கூட்டு நிறுவுனர்களில் ஒருவரான வான் சைபுல், அதிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.
நகர்புற இந்தியர்களின் ஓட்டை 90% சதவீதம் கவரப் பாருங்களேன். .
மலாய்க்காரர்களுக்கு எல்லாமே இன அடிப்படையில் கிடைத்து ஊறிப்போய் விட்டது. அதிலும் இன்றைய கல்வி சிந்திக்கும் திறனை கொடுக்கவில்லை. மற்றவர்களுடன் போட்டி போடும் திறன் இல்லாதவர்கள் கொட்டாங்கச்சியில் தானே குதிரை ஓட்டமுடியும்/
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை ! கோலாலம்பூர் மற்றும் சிலாங்கோரில் தான் அதிகம் மலாய் பணக்காரர்களும் படித்தவர்களும் இருக்கிறார்கள் ! 13 வது பொது தேர்தலில் , சிலாங்கோரில் மூன்றில் இரண்டு அறுதிப்பெரும்பான்மையை எதிர் கட்சி பெற்றது ! எனவே இவர் , மலாய்காரர்களில் வாயாலே KETUPAD சுடும் சங்க தலைவராக இருக்கலாம் !