பயங்கரவாத தடைச் சட்டத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரான வாசுகோபால் தஜரூபன் நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிராக நீர்கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் மேஜர் முத்தலிப் மற்றும் ஜெனரல் பாரமி குலதுங்க இருவரையும் சதித்திட்டம் தீட்டி கொலை செய்ய திட்டம் தீட்டியதாக மூன்று வழக்குகள் கொழும்பு மேல் நீதிமன்றிலும் T 56 தன்னியக்க ஆயுதத்தை உடமையில் வைத்திருந்ததாக நீர்கொழும்பு மேல் நீதிமன்றில் ஒரு வழக்கும் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்து.
அரச தரப்பினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்த எதிரியின் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா அரச சாட்சியங்களின் பல முரண்பாடுகளை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எதிரியை விடுதலை செய்துள்ளார்.
அத்துடன் 12 வருடங்களின் பின்னர் தனக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்த நான்கு வழக்குகளிலிருந்தும் விடுதலையான வாசுகோபால் தஜரூபனை உறவினர் நீதிமன்றிலிருந்து அழைத்துச் சென்றுள்ளனர். இதேவேளை கடந்த 2005ஆம் ஆண்டு ஆனி மாதம் இராணுவப் படையை சேர்ந்த மேஜர் முத்தலிப் ஜெனரல் பாரமி குலதுங்க இருவரையும் சதித்திட்டம் தீட்டி கொலை செய்வதற்கு பயன்படுத்துவதற்காக T 56 தன்னியக்க ஆயுதத்தை உடமையில் வைத்திருந்ததாக 2006ஆம் ஆண்டு பயங்கரவாத தடைப் பிரிவுப் காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.