எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், ஒரே சின்னத்தைப் பயன்படுத்த பக்காத்தான் ஹராப்பான் முடிவெடுத்துள்ளது.
ஹராப்பான் கூட்டணிக்கான அதிகாரப்பூர்வப் பதிவு விண்ணப்பத்திற்கு, இயக்கப் பதிவகத்திடமிருந்து, எந்தவொரு பதிலும் வரவில்லை என்றால், அந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கூட்டணியின் தலைவர் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.
“அனைத்து கட்சிகளும் ஒரே சின்னத்தைப் பயன்படுத்தும், அந்தச் சின்னம் அங்கீகரிக்கப்படுகிறதோ, இல்லையோ, எங்களுக்கான ஓர் அடையாளமாக, நாங்கள் ஒரே சின்னத்தைப் பயன்படுத்துவோம்,” என இன்று, எதிர்க்கட்சி தலைமை மன்றத்தின் கூட்டத்திற்குப் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆனால், எந்தச் சின்னத்தைப் பயன்படுத்துவதென்று, தாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் சொன்னார்.