தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், இலங்கையில் இணைப்பாட்சிக்கான ஏற்பாடுகளுக்கு இந்தியா அழுத்தம் வழங்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அண்மைக்காலமாக இந்திய வெளிவிவகார பொருளாதார கொள்கை பெற்றுக்கொடுப்பதிலே கவனம் செலுத்தியது. இந்தியா இனியாவது வலிமையான ஒரு நெருக்குதலையும் அழுத்தங்களை மத்திய அரசாங்கத்திற்கு கொடுத்து நாட்டில் ஒரு இணைப்பு ஆட்சியினை உண்டு பண்ண வழி அமைக்க வேண்டும்.
13வது திருத்த சட்டம் கூட இந்தியாவின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப தயாரிக்கப்படவில்லை. 1992ஆம் ஆண்டு அதில் தரப்பட்ட சொற்ப அதிகாரங்களும் மத்திய அரசாங்கத்தினால் தட்டி அடித்து பறித்து எடுக்கப்பட்டுள்ளது. இனியாவது விறைப்பான கொள்கைகளை எடுங்கள் என ஒரு கோரிக்கையினை முன்வைக்கின்றேன்.” என்றுள்ளார்.
-4tamilmedia.com