காணாமல் போனோர் பணியகத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையானது, முக்கியமானதொரு நகர்வு என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் பணியகத்துக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று நியமனக் கடிதங்களை வழங்கியிருந்தார்.
இதுதொடர்பாக அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தமது கீச்சகப் பக்கத்தில் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “வலுவான, சுதந்திரமான, காணாமல்போனோருக்கான பணியகத்தின் உருவாக்கமானது, சிறிலங்காவின் அனைத்து மக்களுக்கும், குறிப்பாக தமது அன்புக்குரியவர்கள் தொடர்பான பதிலைத் தேடுகின்ற மக்களுக்கு, நிலையான அமைதி, மீள நிகழாமை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கு ஒரு முக்கியமான நகர்வாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
-puthinappalakai.net