லண்டனில் எமக்கு பாதுகாப்பு இல்லை- சிங்களவர் வெளிநாட்டு அமைச்சிடம் புகார் கூறியுள்ளார்கள்…

லண்டனில் எமக்கு பாதுகாப்பு இல்லை, தமிழர்கள் பெரும் அளவில் வாழ்வதால் எமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சிங்களவர்கள் பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சரின் செயலாளரிடம் கூறியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. சிங்கள மக்களின் புலம்பெயர் அமைப்பான, உலக இலங்கையர் பேரவையைச்(GSF) சேர்ந்த 3 பேர் அடங்கிய குழு ஒன்றே இவ்வாறு பிரித்தானிய வெளியுறவு துறை அதிகாரிகளை நேற்று முன் தினம் சந்தித்துள்ளார்கள்.

கடந்த மாதம் கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டிய சிங்கள ராணுவ அதிகாரியை, நாட்டை விட்டு அகற்றுமாறு பிரித்தானியா கோரிக்கை விடுத்தது. இதனை அடுத்து இந்திக்க மீண்டும் இலங்கை அழைக்கப்பட்டார். இன் நிலையில் தான் அதன் பின்னர் தமிழர்களால் சிங்கள மக்கள் லண்டனில் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருவதாக இவர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள்.

இதேவேளை ரஷ்யாவின் முன் நாள் உளவாளியும், பிரித்தானிய அரசின் பாதுகாப்பில் இருந்த ஸ்கிப்பால் நஞ்சூட்டப்பட்டது தொடர்பாக பிரித்தானிய அரசு பெரும் அதிருப்த்தி அடைந்துள்ளது. பிரித்தானிய மண்ணில் ராஜதந்திரிகள் என்ற போர்வையில், ராணுவ அதிகாரிகள், உளவுப் பிரிவின் நபர்கள் வருவதை தடுக்கவேண்டும் என்று பிரித்தானிய அரசுக்கு அன் நாட்டு புலனாய்வுத்துறை அழுத்தங்களை கொடுத்து வருகிறது. இதனை தமிழர்கள் சாதமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இலங்கையில் இருந்து இனி எந்த ஒரு ராணுவ மற்றும் புலனாய்வு துறை அதிகாரிகள் ராஜதந்திரிகளாக பிரித்தானியாவுக்குள் நுளையக் கூடாது என தமிழர்கள் பிரித்தானிய அரசுக்கு,

ரஷ்ய விடையத்தை மேற்கோள் காட்டி அழுந்தங்களை கொடுப்பது நல்லது. இது தமிழ் அமைப்புகளின் கடமையாக உள்ளது.

-athirvu.com

TAGS: