சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் மேம்படுத்தப்பட்ட நீதியை வழங்குவதற்கு இலங்கையில் காணப்படும் நீதி மற்றும் சட்ட அமுலாக்க பொறிமுறைகள் முழுமையாகஇயலுமானதாகவும், ஈடுபாடானதாகவும் உள்ளது என ஜெனிவாவில் இலங்கை அறிவித்துள்ளது.
அத்துடன், அனைத்து நல்லிணக்க பொறிமுறைகளும் எமது அரசியலமைப்பிற்கு இயைபாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இலங்கை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் பதிலளித்து உரையாற்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனஅரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை எடுத்துரைத்துள்ளார்.
-tamilcnn.lk

























