“பிரபாகரன் புத்திசாலி அல்ல” – என்கிறார் கோத்தா

விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களின் தனக்கு நம்பிக்கை இருக்கவில்லை என்றும், அது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று தான் கருதியதாகவும், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவரிடம், போர் முடிவுக்கு வருவதற்கு முன்னர், விடுதலைப் புலிகளுடன் கடைசி நேரப் பேச்சுக்கள் ஏதாவது இடம்பெற்றதா, புலிகளின் தலைவர் பிரபாகரனை அது சென்றடைந்தா? எனறு கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவதில் நான் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அது நேரத்தை வீணடிக்கின்ற செயல் என்று இப்போதும் கருதுகிறேன்.

பிரபாகரனை ஒரு புத்திசாலி என்று நான் கூறமாட்டேன்.

ஆனால், கே.பி எனப்படும் செல்வராசா பத்மநாதன் அவ்வாறில்லை. வெளிநாட்டில் இருந்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட போது, நடுங்கிக் கொண்டிருந்தார். அவர் அது தான் கடைசித் தருணம் என்று நினைத்தார்.

அவர் இப்போது, மகிழ்ச்சியாக இருக்கிறார். ஏனென்றால், அவருடைய கடந்தகால மற்றும் தவறுகளை புரிந்து கொள்ள நாங்கள் தயாராக இருந்தோம், அவரை ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்த அனுமதித்தோம்.

கேபியின் புனர்வாழ்வு ஒரு பெரிய விடயம். அதனை நாங்கள் இன்னும் நம்புகிறோம்.” என்று கூறியுள்ளார்.

-puthinappalakai.net

TAGS: