மறைக்கப்பட்டுள்ள விடயங்கள்! ஜனாபதியை சூழ காணாமல் போனதாக கூறப்படும் தமிழ் மாணவர்கள்

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து ஒன்பது வருடங்கள் கடந்துள்ள போதிலும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் காயங்கள் இன்னும் ஆற்றப்படவில்லை என ஐ.ரி.வி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், யுத்த காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் கோரிக்கை தொடர்பான விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் மற்றும் அரச படையினரால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எனவும், அதன் பின்னர் அவர்களை மீண்டும் காண கிடைக்கவில்லை என்றும் அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் ஒரு இலட்சம் பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய ஐ.நா குழு காணாமல் போக செய்தல், திட்டமிட்டு பாரியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

தமது கேள்விக்கு பதில் கோரி இலங்கையின் வடக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வீதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமது பிரச்சினை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த தவறியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அரசாங்கத்தின் மீது இவர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சூழ தமிழ் பாடசாலை மாணவர்கள் இருக்கும் புகைப்படம் ஒன்றை தாய் ஒருவர் தன் வசம் வைத்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் உள்ள பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாக 5 தாய்மார் கூறியுள்ளனர். படத்தில் இடது பக்கம் இருக்கும் ஜேரோமி காசிப்பிள்ளை காணாமல் போயுள்ளதாக அவரது தாய் தெரிவிக்கின்றார்.

தனது மகள் 17 வயதில் குடும்பத்தில் இருந்து பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறுகிறார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும், அதில் காணாமல் போன தனது மகள் இருப்பதாகவும் ஜேரோமியின் தாயாரான ஜெயவனிதா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சிறிசேனவை சந்தித்து திருமதி காசிப்பிள்ளை தேர்தல் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை காட்டியுள்ளார்.

இது தொடர்பாக தேடிப்பார்ப்பதாக ஜனாதிபதி உறுதியளித்த போதிலும் கடந்த மூன்று வருடங்களாக எதுவும் நடக்கவில்லை எனவும் ஜெயவனிதா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஜனாதிபதியுடன் புகைப்படத்தில் காணப்படும் தனது மகன் சுரேஷூம் காணாமல் போயுள்ளதாக அன்னலட்சி ஹூசைன் என்ற தாய் கூறியுள்ளார்.

13 வயதான சுரேஷ் மற்றும் 15 வயதான அவரது சகோதரர் ரவி ஆகியோர் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் காணாமல் போயுள்ளனர். அதற்கு 6 வருடங்களுக்கு முன்னர் தனது கணவரான மொஹமட் ஹூசைன் காணாமல் போனதாகவும் அன்னலட்சுமி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சர்ச்சைக்குரிய அந்த புகைப்படம் போலியாக தயாரிக்கப்பட்டது எனவும், ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் ஒரு பத்திரிகையில் அந்த படம் வெளியிடப்பட்டிருந்ததாகவும் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இதேவேளை காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தொடர்பான விடயம் பிரச்சினைக்குரியது எனவும் பல்லாயிரக்கணக்கானவர்கள் காணாமல் போனார்கள் என்பதை ஏற்க முடியாது எனவும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனவர்களை உறவினர்கள் காலப் போக்கில் மறந்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அரசாங்கம் விளையாடி வருகிறதோ என்ற அச்சம் உறவினர்களுக்கு ஏற்பட்டுள்ளது எனவும் அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், இலங்கையில் காணாமல் போனவர்களின் தாய்மார் பதிலை எதிர்பார்த்து காத்துள்ளனர். இலங்கையில் போர் முடிவுக்கு வந்து ஒன்பது மாதங்கள் கடந்துள்ள போதிலும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் காயங்கள் இன்னும் ஆற்றப்படவில்லை என ஐ.ரி.வி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

26 வருடகால மோதல்கள் காரணமாக காணாமல் போனவர்களின் உறவினர்களின் கோரிக்கை தொடர்பான விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் மற்றும் அரச படையினரால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள். அதன் பின்னர் அவர்களை மீண்டும் காணக் கிடைக்கவில்லை எனவும் அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

-puthinamnews.com

TAGS: