இந்தியாவின் பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர், இலங்கைப் பிரச்சினை தொடர்பாக மேற்கொண்ட தலையீடுகளையும் பங்களிப்பையும் நேற்று (01) நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், அத்தலையீடுகளின் விளைவாக மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்ட போதிலும், அது ஒரு தீர்வல்ல எனவும் தெரிவித்தார்.
அகில இலங்கை கம்பன் கழகத்தால் கௌரவிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர், அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான நிரந்தரமானதொரு தீர்வு, நாடு சுதந்திரமடைவதற்கு முன்னரே ஏற்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், 1935ஆம் ஆண்டு, டொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு விஜயம் செய்த போது, அவ்வாணைக்குழுவின் பிரேரணையில் அடிப்படையில் கடமைகள் நிறைவேற்றப்பட்டிருந்தால், சுயாட்சியின் அடிப்படையில் இப்பிரச்சினைக்கான தீர்வு, நாடு சுதந்திரமடைவதற்கு முன்னர் பிறந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்தியாவில், 1935ஆம் ஆண்டில், மாகாணங்கள் உருவாக்கப்பட்டு, மாகாணங்களுக்குச் சுய அதிகாரம் வழங்கப்பட்டமையை ஞாபகமூட்டிய எதிர்க்கட்சித் தலைவர், சுதந்திரத்தின் பின்னர் அந்நாட்டின் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் போது, சுயாட்சியின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டி, அவ்வாறான சந்தர்ப்பத்தை இலங்கை இழந்து விட்டது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “நாங்கள் ஆரம்பத்தில், டொனமூர் ஆணைக்குழுவின் முன்னால், பூரண சுயாட்சி கேட்டோம். தமிழ் மக்கள் அதிகமாக வாழும் இடங்களில், சமஷ்டி அடிப்படையில் ஆட்சி பகிரப்பட வேண்டுமென நாம் கோரவில்லை. பூரண சுவராஜ் (சுயாட்சி) கேட்டோம். கண்டியச் சிங்களத் தலைவர்கள், தங்களுக்குச் சமஷ்டி கேட்டார்கள். அவர்களுக்கு ஆதரவு வழங்கவில்லை.
“டொனமூர் ஆணைக்குழு வந்த போது, நாங்கள் 50-50 என்று கேட்டோம். அது தவறென்று கூறவில்லை. ஆனால் எந்தளவுக்கு யதார்த்தமென்பது கேள்விக்குரியது” என்று தெரிவித்தார்.
நாடு சுதந்திரமடைவதற்கு முன்பாக இந்நிலைமை காணப்பட்டது எனத் தெரிவித்த அவர், நாடு சுதந்திரமடைந்த பின்னர், பிரச்சினைகளைத் தீர்ப்பது கடினமாக இருந்தது என்பதைக் குறிப்பிட்டதோடு, “சாதாரண மாவட்ட சபைகளை உருவாக்குவதற்குக் கூடக் கடினமாக இருந்தது” என்றார்.
தற்போதைய நிலை குறித்துக் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வைப் பெறுவதற்கு, யதார்த்தமாகச் செயற்பட வேண்டிய தேவையை வலியுறுத்தியதோடு, அனைத்து மக்களும் தீர்வை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது எனக் கூறினார்.
“பாமர சிங்கள மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் நியாயமான, நிதானமான ஒருமித்த நாட்டுக்குள் தீர்வை ஏற்படுத்துவதற்கு மறுப்பார்கள் என நினைக்கவில்லை. அவர்களுக்கு உண்மையை விளக்கி, அவர்களுடைய ஒத்துழைப்புடனும் தீர்வை ஏற்படுத்த வேண்டும். அது தான் ஒரே வழி” என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக, சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்றிருப்பதாகக் கூறிய அவர், “எங்களுடைய கோரிக்கை நியாயமானதொரு கோரிக்கை; அது அங்கிகரிக்கப்பட வேண்டிய ஒரு கோரிக்கை; அங்கிகாரத்தைப் பெறுவதற்கான கோரிக்கை என்ற நிலைப்பாட்டில் சர்வதேச சமூகம் இருக்கிறது. அதை நாங்கள் பலப்படுத்த வேண்டும்” என, மேலும் குறிப்பிட்டார்.

-tamilmirror.lk