தனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக எந்தவித உடன்பாட்டிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கைச்சாத்திடவில்லை என்று தேசிய கலந்துரையாடல் அமைச்சரான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தெகிவளையில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை எடுத்து வந்தது. பிரதமர் அதற்குப் பதிலளித்திருந்தார். ஆனாலும், கையெழுத்திடவில்லை.” என்றுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 கோரிக்கைகள் அடங்கிய நிபந்தனையை முன்வைத்திருந்தது. அவை ஏற்றுக்கொள்ளப்பட்டதன் அடிப்படையிலேயே, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-4tamilmedia.com