பெண் தலைமைத்துவ குடும்பத்தை கட்டி எழுப்பும் நோக்குடன் வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு

நாட்டில் இத்தனை அழிவுகளும், சோதனைகளும் வந்தும் பெண்கள் யாருக்கும் சோர்ந்து போகாமல் பெண் தலைமைத்துவ குடும்பத்தை கட்டி எழுப்புவதாக மகளீர் தின விழாவில் இலங்கை தமிழ் அரசுக் காட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்……,

நடைபெற்ற முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இந்த முறை 25% பெண்கள் தெரிவு செய்ய வேண்டும் எனும் சட்ட விதி இருந்தும் இவ் சட்டவிதி மூலம் பெண்கள் அதிகமாக வெற்றி பெற வாய்ப்பிருக்கவில்லை. ஆனாலும் குறைந்த அளவில் பெண்கள் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

இந்த நாட்டின் வரலாற்றில் பெண்கள் 53% பெரும்பான்மையாக பெண்கள் இருக்கின்றனர். ஆண்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. நாட்டில் இடம்பெற்ற போரில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூடுதலாக பலியாகி இருக்கினறனர். ஆனால் போராளிகளில் பெண்களுக்கான முக்கியத்துவம் விடுதலை போரில் இருக்கின்றது.

நாட்டில் 53% பெண்கள் இருந்தும் தேர்தலில் தமக்கான வாக்கினை ஆண்களுக்கு வாக்களித்து வரும் மனப்பாங்கு பெண்களிடத்தில் காணப்படுகிறது.

இந்த நாட்டில் போர் காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஐ.நா. சபையிலே இருக்கும் “யூனிசெஃப்” நிறுவனம் குறிப்பாக வடக்கு, கிழக்கில் ஆய்வு செய்து தெரிவிக்கையில் பிறந்த குழந்தையும் இனி பிறக்கின்ற குழந்தையும் சரியான ஊட்டச்சத்து இல்லாமல் பிறப்பதாக தெரிவித்தனர்.

உலகத்தோடு ஒப்பிட்டு பாக்கும் பொழுது கல்வியிலும், விளையாட்டிலும் புத்திசாலியாகவும் சிறந்த உடற்கட்டு உடையவர்களாகவும் மிகவும் பலம் உடையவர்களாகவும் பல துறையில் அதிகமாக பெண்கள் எண்ணிக்கை வளர்ச்சி பெற்று காணப்படுகின்றனர்.

நாட்டின் வரவு செலவுத்திட்டத்தில் முதல்முறையாக பல ஆயிரம் கோடி பணம் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள், கிழக்கு மாகாணத்தில் விதவை பெண்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்களாக 90000 குடும்பங்கள் எங்கள் மத்தியில் இருக்கின்றனர். போர் முடிந்த பின்னும் இவர்களுக்கான வாழ்வாதாரம் எதுவும் கிடைக்காமல் இருப்பதனை சுட்டிக்காட்ட முடிகின்றது.

புனர்வாழ் பெற்றவர்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு எந்த துறையில் சிறப்பாக செயற்படுகிறார்கள் என மதிப்பீடு செய்து அவர்களுக்கான வேலை வாய்ப்பினை வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

-tamilcnn.lk

TAGS: