‘இந்திய அரசாங்கமும் பொறுப்புக் கூறவேண்டும்’

“13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான காணிச் சட்டத்துக்கு அமைவாக தமிழ் மக்களுக்கு உரித்தாக அவர்களுக்குரித்தாக அவர்களின் பூர்விகக் காணிகள் இருந்திருக்க வேண்டும். இத்திருத்தச் சட்டத்தில் இந்திய அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை. இது தொடர்பில் இந்தியஅரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டிய கடமையில் இருக்கின்றார்கள்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் காணிப் பிரச்சனை தொடர்பில் ஆராய்வதற்காக வட மாகாண சபை உறுப்பினர்கள் முல்லைத்தீவுக்கு இன்று பயணம் மேற்கொண்ட நிலையில், இவர்களுக்கு ஆதரவாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் சி. சிவமோகனும் முல்லைத்தீவுக்குச் சென்றிருந்ததுடன், கேப்பாபுலவில் பேராட்டம் நடத்தும் மக்களையும் பிலக்குடியிருப்பு மக்களையும் சென்று பார்வையிட்டிருந்தார்கள்.

இதன்பின்னர் மகாவலி அபிவிருத்தி திட்டம் தொடர்பில் சி. சிவமோகன் கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி கருத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

-tamilmirror.lk

TAGS: