புதிய அரசியலமைப்புக்கான தேக்கநிலை நீக்கப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்துவரும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை நீக்கப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இரா.சம்பந்தனின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலங்கை வாழ் தமிழ், சிங்கள மக்களால் ஒரே தினத்தில் கொண்டாடப்படுகின்ற திருநாளாக சித்திரைப் புத்தாண்டு அமைகின்றது.

சிறப்புமிகு திருநாளைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது உளம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்துவரும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த புதிய அரசியல் யாப்பு உருவாக்க முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை நீக்கப்படவேண்டும். இதற்கு துரித கதியில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் ஊடாக உருவாக்கப்படும் அரசியல் யாப்பின் மூலம் மக்கள் கௌரவத்துடனும் பாதுகாப்புடனும், சுய உரிமையுடனும் வாழும் நிலை பிறக்கும்.

ஒரு நாடு பொருளாதாரம் உட்பட அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டுமானால், அந்நாட்டில் அமைதி, சாந்தி, சமாதானம் நிலவுவது அத்தியாவசியமாகும். எமது நாட்டில் அவ்விலக்கினை அடைவதற்குத் தடையாக உள்ள காரணிகளில் முதன்மையானதாக விளங்குவது நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசியப் பிரச்சினையாகும் என்று குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த புதிய அரசியல் யாப்பு உருவாக்க முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை நீக்கப்பட்டு, துரித கதியில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு. அதன் ஊடாக உருவாக்கப்படும் அரசியல் யாப்பின் மூலம் மக்கள் கௌரவத்துடனும் பாதுகாப்புடனும், சுய உரிமையுடனும் வாழும் நிலை ஏற்பட பிறக்கும் விளம்பி வருடம் வகை செய்திட வேண்டும்.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: