பாஸ் கட்சி எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலில் 222 நாடாளுமன்ற இடங்களில் 150க்கு மேற்பட்ட இடங்களுக்கும் 587 சட்டமன்ற இடங்களில் பெரும்பாலான இடங்களுக்கும் போட்டியிடும். சரவாக்கில் மட்டும் அது போட்டியிடாது.
மலேசியாவில் எந்தவொரு கட்சியும் ஒரு பொதுத் தேர்தலில் இத்தனை இடங்களுக்குப் போட்டியிட்டது இல்லை. 13வது பொதுத் தேர்தலில் அம்னோகூட 121 நாடாளுமன்ற இடங்களுக்குத்தான் போட்டியிட்டது.
நேற்றிரவு பினாங்கில் கூடிப்பேசிய 12-பேரடங்கிய பாஸ் செயல்குழு 95 விழுக்காட்டு வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டதாக பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறினார்.
“வேட்பாளர் பட்டியல் சாபா, சரவாக் (ஏப்ரல் 211) கிளந்தான் (ஏப்ரல் 25) நீங்கலாக, ஏப்ரல் 19-இல் அறிவிக்கப்படும்”, என்றாரவர்.