அம்னோ மகளிர் தலைவர் ஷரிசாட் அப்துல் ஜலில், எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலில் பண்டார் துன் அப்துல் ரசாக் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுவதை மறுத்தார்.
“பலர் என்னிடம் வந்து பண்டார் துன் அப்துல் ரசாக்கில் போட்டியிடுவீர்களா என்று வினவுகிறார்கள்.
“இல்லை என்பதே என்னுடைய பதில். இவ்வளவுக்கும் பண்டார் துன் அப்துல் ரசாக் பாரிசான் நேசனல் வெற்றிபெறக் கூடிய இடமாகும்”, என்றாரவர்.
2013 பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்த ஷரிசாட் ஜிஇ 14-இல் திரும்ப வந்து போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2008-இல் லெம்பா பந்தாயில் போட்டியிட்ட அவர் பிகேஆரின் அறிமுக வேட்பாளர் நூருல் இஸ்ஸா அன்வாரிடம் தோற்றார்.