பேரா அமனா நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 12 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும்.
இதனைச் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்த மாநில அமனா தலைவர் அஸ்முனி அவி, தாம் மாஞ்ஜோல் சட்டமன்றத் தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளராகக் களமிறங்க உள்ளதாய்க் கூறினார்.
அமனா உதவித் தலைவர் முஜாஹிட் யூசுப் ராவா அவரது பாரிட் புந்தார் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக்கொள்ள முற்படுவார் என்றும் அவர் அறிவித்தார். கோலா கங்சார் நாடாளுமன்றத் தொகுதியில் அஹமட் தெர்மிஸி ரம்லி போட்டியிடுவார். இவர் 2016 -இல் கோலா கங்சார் இடைத் தேர்தலில் போட்டியிட்டவர்.