திருகோணமலையில் உள்ள சோழர் காலத்து ஆலயத்திற்கு எதிர்கட்சித் தலைவரால் அடிக்கல் நாட்டிப்பட்டது

திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பரிபாலனத்தில் உள்ளதும், சோழப்பெரு மன்னர்களால் திருக்கோணேஸ்வரத்தின் ஏழு எல்லைக்காவல் தெய்வங்களில் ஒன்றாக ஸ்தாபிக்கப்பட்ட வரலாற்று பெருமை மிக்க பன்குளம், பறையன் குளம் அருள் மிகு எல்லைக்காளி அம்பாள் ஆலயத்தின் சங்குஸ்தாபன அடிக்கல் நடும் விழா 18-04-2018 புதன்கிழமை நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பிரதித் தலைவர் சி. புலேந்திரராஸ் அவர்களின் வரவேற்புரையுடன் இந்நிகழ்வு ஆரம்பமானது.
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க .துரைரெட்ணசிங்கம்,முன்னால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிவஞானச் செல்வர் செல்லப்பா சிவபாதசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா வேதாகமமாமணி பிரம்மஸ்ரீ. சோ.இரவிச்சந்திரக் குருக்களின் வழிகாட்டுதலில் 18-04-2018 புதன்கிழமை காலை 9.00 மணிதொடக்கம் 12.00 மணிவரையுள்ள சுபமுகூர்த்தத்தில் சங்குஸ்தாபன அடிக்கல் நடப்பெற்றது.

நல்லகுட்டியாறு என்ற (தற்போது நாமல்வத்தை) இடத்தில் இருந்து காட்டு வழியாக 07 கி.மீ தூரத்தில் இவ் வாலயம் அமைந்துள்ளது. பெளர்ணமி தினங்களில் இவ்வாலயத்தில் விசேட பூசைகள் இடம் பெற்று வரகின்றமை குறிப்பிடத்தக்கது.

-tamilcnn.lk

TAGS: