மசீச “உருத்தெரியாமல் ஒழிந்துபோவதற்கு உண்மையில் திட்டமிட்டது” அம்னோதான் என்கிறார் டிஏபி தேர்தல் வியூகவாதி லியு சின் தொங்.
இப்போது அம்னோவும் மசீசவும் இடத்துக்கு அடித்துக்கொள்கின்றன. ஆனால், பக்கத்தான் ஹரப்பான் அப்படி அல்ல. நாடு முழுக்க இட ஒதுக்கீட்டைச் செய்து முடித்து விட்டது.
தேர்தல் தொகுதி எல்லைகள் திருத்தப்பட்டதால் மசீசவுக்குத் தேர்தலில் வெற்றிகாண்பது முன்னிலும் சிரமமாகி விட்டது என்றாரவர்.
“இதிலிருந்து மசீசவின் அழிவுக்குப் பின்னணியில் இருப்பது அம்னோதான் என்பது தெளிவாகிறது. மசீச உறுப்பினர்கள் உண்மையான எதிரிகள் யார் என்பதை இப்போதாவது உணர வேண்டும்”, என லியு ஓர் அறிக்கையில் கூறினார்.