தீர்வு முயற்சிகள் கைவிடப்பட்டால், அரச நிர்வாகத்தை முடக்கும் போராட்டத்தை ஆரம்பிப்போம்: எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளை ஒரு மாதத்துக்குள் அரசாங்கம் காத்திரமாக முன்னெடுக்காவிட்டால், வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரச நிர்வாகத்தை முடக்கும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி விவாதமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “எதிர்வரும் மே, யூன் மாதங்களுக்குள் அரசியல் தீர்வு முயற்சிகள் சரியான திசையில் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதில் தெளிவான பதில் கிடைக்க வேண்டும். அப்படி முன்னேறுமாக இருந்தால் இந்த வருட இறுதிக்குள் அவை நிறைவு செய்யப்பட வேண்டும் என்கிற தெளிவான காலக்கெடு ஒன்றை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கொடுத்துள்ளோம். இந்தக் காலப்பகுதிக்குள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்றால், வடக்கு கிழக்கில் அரச நிர்வாகத்தை முடக்கும் போராட்டத்தை கூட்டமைப்பு முன்னெடுக்கும்.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: