14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட மசீச தலைமைச் செயலாளர் ஓங் கா சுவான் தேர்வு செய்யப்படவில்லை.
இரு தவணைகளுக்கு தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவருக்கு பதிலாக பேராக் மசீச தலைவர் டாக்டர் மா ஹாங் சூன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மா பிகேஆரின் சாங் லீ காங் மற்றும் பாஸின் முகமட் தார்மிஸி அப்துல் ரஹ்மான் ஆகியோரை எதிர்கொள்ளவிருக்கிறார்.
முன்னாள் மசீச தலைவர் ஓங் கா திங்கின் தமயனான ஓங் 1986 லிருந்து 2004 வரையில் சட்டமன்ற உறுப்பினராகவும் 2008 இல் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு 2013 அத்தொகுதியைத் தற்காத்துக் கொண்டார்.
சமீப காலத் தேர்தல்களில் ஒரு மசீச தலைமைச் செயலாளர் போட்டிக்கு தேர்வு செய்யப்படாதது இதுவே முதல் தடவையாகும்.