20 ஆண்டுகளுக்கு மேலாக மைபிபி கட்சியின் தலைவராக உள்ள எம்.கேவியஸ் அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தம் பதவி விலகல் திங்கள்கிழமையிலிருந்து அமலுக்கு வருவதாக அவர் இன்று டிவிட்டரில் குறிப்பிட்டார்.
அந்த பிஎன் அரசியல்வாதி பேராக் மாநில கட்சி அலோசகர், கூட்டரசுப் பிரதேச மைபிபி தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தும் விலகுகிறார்.
இதற்குமுன் கேவியஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
அவர் கேமரன் மலை தொகுதி தமக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அத்தொகுதி மஇகா இளைஞர் தலைவர் சி.சிவராஜுக்கு வழங்கப்பட்டது.
பாவம் பார்த்து அடிக்கும் சாமி!
ஓடி ஓடி உழைக்கனும். உதைபட்டாலும் வாங்கிகிட்டு பெரிய அண்ணன் காலை நக்கனும். அப்பதான் பதவி சுகம் கிடைக்கும். இல்லையென்றால் உம் கட்சிகாரனே உம்மைத் தூக்கி விடுவான்.
உம் கட்சிக்காரரே மூன்று நாமம் போட்டு விட்டதைப் பார்த்தாயா?
Mic cannot be shaken. But in the election aromas.