மைபிபிபி கட்சி தலைவர் எம். கேவியஸுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டு பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் அக்கட்சிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதம் மைபிபிபி “பிஎன்-னிலிருந்து வெளியேறும்படி” கேட்டுக்கொள்ளப்படலாம் என்ற மறைமுகக் குறிப்பைக் கொண்டிருந்தது என்று மைபிபிபியின் துணைப் பொதுச் செயலாளர் சைமன் சபாபதி கூறினார்.
ஏப்ரல் 24 ஆம் தேதியிடப்பட்ட அக்கடிதம் கேவியஸுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது என்றாரவர்.
மேலும், அக்கடிதத்தில் பிஎன்-னிலிருந்து மைபிபிபி வெளியேற வேண்டும் என்றும் மறைமுகமாகக் கூறியிருந்தது என்று சைமன் பெட்டாலிங் ஜெயாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இன்று கூறினார்.
மைபிபிபியின் மூத்த உதவித் தலைவர் மேக்லின் டென்னிஸ் டி’குருஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தன் சுய காலில் நிற்காமல் அமீனோ போடும் பிச்சையில் வாழ்ந்து வாயில் வடை சுட்ட கட்சிகளுக்கெல்லாம் இந்திலைதான் வரும். அடுத்து ம.இ.க. ஐ.பி.எப், மக்கள் சக்தி கட்சிகளுக்கு இந்த நிலை வரும்.