காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர்கள், அடுத்த மாதம் தொடக்கம் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.
காணாமல் போனோர் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தமது கீச்சகப் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்து, தமது திட்டங்கள் குறித்து விபரிக்கவுள்ளதாகவும், பணியகம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற அவர்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வகையில் காணாமல் போனோர் பணியகத்தின் முதலாவது சந்திப்பு மே 12ஆம் நாள் மன்னாரில் நடைபெறவுள்ளது.
அதேவேளை இரண்டாவது கூட்டம் மாத்தறையில் அடுத்தமாதம் நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
-puthinappalakai.net