கோலாலம்பூரில் இன்றிரவு நூற்றுக்கணக்கான பிகேஆர் உறுப்பினர்கள் ஒரு மெழுகுவத்தி விழிப்பு நிலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை தியன் சுவாவுக்கு தெரிவித்தனர்.
தியன் சுவா பத்து நாடாளுமன்ற தொகுதியின் பிகேஆர் வேட்பாளராக போட்டியிட அனுமதிக்கப்படவில்லை.
அங்கு குழுமியிருந்தவர்கள் அவரின் மே 9 தேர்தலுக்கான திட்டங்கள் பற்றி அவரிடமிருந்து தெரிந்து கொள்ள ஆவலோடு காத்திருந்தனர்.
பல பிகேஆர் தலைவர்கள், எலிசபெத் வோங், கான் பெய் நெய் மற்றும் டாக்டர் டான் கீ கிவோங் உட்பட, அங்கிருந்தனர்.
மற்ற தலைவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கையில், தியன் சுவா அவருடைய ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருக்கக் காணப்பட்டார்.
தியன் சுவாவை நிராகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவை நீதிமன்றம் தள்ளுபடி செய்யும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று கூறிய எலிசபெத் வோங், எதிர்வரும் வியாழக்கிழமை நாம் இந்த வழக்கில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அனைவரும் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் தியனுக்கு ஆதரவு தெரிவிக்க வந்து விடுங்கள் என்று அவர் மேலும் கூறினார்.