கெடாவில் பக்கத்தான் ஹரப்பானுக்கு இந்தியர்களின் ஆதரவு பெருகி வருவதாகத் தெரியும் வேளையில் மலாய் சுனாமியில் வேகம் இல்லை என்று மெர்டேக்க மையத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பக்காத்தானுக்கு ஏப்ரல் 2 இல் 32.5 விழுக்காடாக இருந்த இந்தியர்களின் ஆதரவு ஏப்ரல் 26 இல் அது 55.7 ஆக உயர்ந்துள்ளது.
எதிர்மாறாக இருப்பது பிஎன்னுக்கான இந்தியர்களின் ஆதரவு. அதே காலகட்டத்தில் 64.5 விழுக்காட்டிலிருந்து 41.2 விழுக்காட்டிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
கடந்த சில வாரங்களில், ஹரப்பான் தலைவர் மகாதிருக்காக இந்தியச் சமூகம் சம்பந்தப்பட்ட பல நிகழ்ச்சிகளை ஹிண்ட்ராப் ஏற்பாடு செய்திருந்தது.
பிஎன்னுக்கான மலாய்க்காரர்களின் ஆதரவு பாதிக்கும் மேலாகக் குறைந்திருப்பத்தை மெர்டேக்கா மையம் கண்டுள்ளது.