விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து அவர்களின் முக்கிய உறுப்பினரான கருணாவை, அப்புறப்படுத்தி அவரை இலங்கை அரசாங்கத்தின் அடிவருடியாக மாற்றும் முயற்சியில் பெரும் பங்காற்றியவர் அலிசாஹிர் மௌலானா என்பது உலகறிந்த விடயம்.முரளிதரனின் பாடசாலை காலத்து நண்பராகிய அலிசாஹிர் மௌலானா இந்த பிரிப்பு வேலையில் ஈடுபட்ட பின்னர் , தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பாரிய பிளவு ஏற்பட்டு அவர்களின் போராட்டபாதை பெரும் பின்னடைவை சந்தித்து இருந்தது.
சிறிது சிறிதாக வளர்த்து எடுக்கப்பட்ட போராட்டம் ஒரே நாளில் பின்னடைவை சந்திக்க கருணாவின் கூட்டு துரோகம் பாரிய அளவில் பங்களிப்பு செய்திருந்தது. அப்போதைய ரணில் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கு அலிசாஹிர் மௌலானா கூட்டி கொடுத்த அரும் செயலுக்குரிய பலனை தற்போது ரணில் அரசு வழங்கியுள்ளது. ஆம்! இந்த நீண்ட கால இடைவெளியில் , அலிசாஹிர் மௌலானாவின் கூட்டி கொடுப்புக்கு பரிசாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சராக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.