‘பிரபாகரனுக்கு இணை அவர் மட்டுமே’

“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகரான ஒருவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை ஒருபோதும் கருதியதில்லையென” தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (03) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில்,

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின நிகழ்வு யாழ் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றது.

அந்நிகழ்வில் உரையாற்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் எ.ஆனந்தராஜா, பிரபாகரனுக்கு நிகரான தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்று கூறினார் எனவும், அதனை கஜேந்திரகுமாரே அவரூடாக திட்டமிட்டு கூற வைத்தார் என்றும் திரிபுபடுத்தி வெளியிடப்பட்ட செய்திகள் தவறானவை. அவை எமது கட்சி மீதான காழ்ப்புணர்வாலும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான காழ்ப்புணர்வாலும் செய்யப்படும் பொய் பிரச்சாரங்கள்.

பிரபாகரனுக்கு நிகர் அவர் மட்டுமே என்பதும் அவருடன் யாரையும் ஒப்பிட முடியாதென்பதும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட கட்சியிலுள்ள அனைவரதும் உறுதியான நிலைப்பாடாகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

-tamilmirror.lk

TAGS: