கிளந்தான் முன்னாள் மந்திரி பெசார் காலஞ்சென்ற தோக் குரு நிக் அசிஸ் நிக் மாட்டின் கல்லறைக்கு சென்று மரியாதை தெரிவிக்கவிருந்த மகாதிரை அங்கு போகவிடாமல் கல்லறக்குச் செல்லும் கதவைப் பூட்டிதோடு ஒரு லோரியையும் அங்கு நிறுத்தி வைத்தார் தோக் குருவின் மகன் நிக் அட்லி.
மகாதிரின் வருகையில் சுயநலம் இருக்கிறது. மகாதிர் வருகையளிக்க விரும்பினால் தேர்தலுக்குப் பிறகு வரலாம் என்று நிக் அட்லி மலேசியாகினியிடம் கூறினார்.
தோக் குருவின் கல்லறைக்கு வருகையளிக்கும் மகாதிரின் திட்டம் இப்போதைக்கு தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக கிளந்தான் பக்கத்தான் தலைவர் ஹுஸாம் முசா கூறினார்.